கொரோனா அச்சம்!! -11 ஆயிரம் கைதிகளுக்கு விடுதலை-
சிறைச்சாலையில் உள்ள நெரிசலை குறைத்து, அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மராட்டிய மாநில சிறைகளில் இருந்து 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தார்.
சிறைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருக்கும்போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.