SuperTopAds

கொரோனா அச்சத்தால் குடும்பஸ்தர் தற்கொலை!! -குடும்பத்துக்கும் பரவி விரவுமோ என்ற அச்சத்தால் விபரீத முடிவு-

ஆசிரியர் - Editor III
கொரோனா அச்சத்தால் குடும்பஸ்தர் தற்கொலை!! -குடும்பத்துக்கும் பரவி விரவுமோ என்ற அச்சத்தால் விபரீத முடிவு-

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் தனக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனது நோய் குடுபத்துக்கு பரவிவிடும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சதாசிவ செட்டி (வயது 56). ஏன்பவதே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். 

குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்வதால் அங்கு வருபவரிடமிருந்து தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என சந்தேகப் பட்டுள்ளார்.

இருப்பினும் வைரஸ் தொடர்பான எந்த பரிசோதனைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அவர் மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் கொரோனா அச்சம் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 748 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.