உலகம் முழுவதில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி!!

ஆசிரியர் - Editor II
உலகம் முழுவதில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 

இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 


அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

Radio
×