கொரோனா!! -இந்தியாவில் மேலும் ஒரு பலி-

ஆசிரியர் - Editor II
கொரோனா!! -இந்தியாவில் மேலும் ஒரு பலி-

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

Radio
×