இந்தியாவில் 25இலட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்!! -புள்ளிவிபர அறிக்கையில் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 25இலட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்!! -புள்ளிவிபர அறிக்கையில் எச்சரிக்கை-

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பேர் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோரோனா நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது.

தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விபரங்களை கணக்கிட்டு அதனடிப்படையில் புள்ளி விபரம் முறையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் 12இலட்சம் முதல் 25இலட்சம் பேர் வரை நோய் தாக்குதலுக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 60ஆயிரம் பேர் வரை வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லும்நிலை ஏற்படும். மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் ஒரு இலட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக்கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Radio
×