SuperTopAds

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் காட்சி

ஆசிரியர் - Editor IV
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் காட்சி

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில்  வியாழக்கிழமை(26) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.கல்முனை பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்து பொலிசார் சீர் செய்வதை அவதானிக்க கூடியதாகவிருந்து .

கல்முனை பொது சந்தையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பொது சாந்தான்கேணி மைதானத்தில் மரிக்கறி வியாபார நிலையங்கள் தற்காலிகமாக  காணப்பட்டது.மேலும் வியாபார நிலையங்கள்,பொது சந்தைகள்,சுப்பர்மார்க்கெட்டுகள்,பாமசிகள் ,வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களில் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.இதேவேளை தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார நிலையங்களில் பாதுகாப்பு பிரிவினர் மக்களை ஒழுங்கு படுத்தி வருவதுடன்  கல்முனை தொடக்கம் மாளிகை காடு வரையுள்ள கடற்கரை வீதிகளில் மீன்கள் இமரக்கறி வியாபார நிலையங்கள் அதிகம் காணப்பட்டது .அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை ,சாய்ந்தமருது, கல்முனை ,காரைதீவு ,நற்பிட்டினை, சேனைக்குடியிருப்பு ,சம்மாந்துறை ,நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைக்காக மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏனைய வர்த்தக நிலையங்கள் வியாபார தலங்கள் என்றனர் பூட்டப்பட்டு பாதைகள் வெறிச்சோடி  காணப்படுகிறது.பாரிய சவாலாக அமைந்துள்ள கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து நாடு ஊராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் நண்பகல் 2 மணியின் பின்னர்  ஊரடங்கு நிலைமை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் வியாபாரிகளுக்கு தூர இடங்களில் இருந்து மரக்கறி மற்றும் கோழி முட்டை கொண்டு வந்து இறக்குமதி செய்யும் முறை வியாபாரிகளுக்கான அனுமதி இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டது.நீண்ட வரிசையில் காத்திருந்த வியாபாரிகள் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தூர இடங்களுக்கு சென்று பெற்றுக் கொண்டோம் இங்கு கல்முனைப் பிராந்தியத்தில் விற்பனை செய்வதற்கான அனுமதி கோரியிருந்தனர். 

இந்த விடயம் சம்பந்தமாக கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை மாநகரசபை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முப்படையினர் ஆகியோர் கலந்து ஆலோசித்து இதன்பின்னர் பிரதேசத்திற்கான நடமாடும் வியாபாரிகளுக்கான முதற் கட்ட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய வியாபாரிகளுக்கான அனுமதிகள் புதிய பரிசோதனைகள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்து அதனடிப்படையில்   பொலிசாரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.