SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளான 1வது இலங்கையர் சுகமடைந்தார்..! மேலும் இருவரின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான 1வது இலங்கையர் சுகமடைந்தார்..! மேலும் இருவரின் நிலை கவலைக்கிடம்..

இத்தாலி நாட்டவர்களுக்கு பயண வழிகாட்டியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற் றுக்குள்ளான 1வது இலங்கையர் சுகமடைந்து இன்று வீடு திரும்பியிருக்கின்றார்.

தொற்று நோயியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர் பூரண சுகமடைந்த நிலையில் இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

மேலும் இலங்கையில் 81 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 74 பேர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையிலும், 7 பேர் வெலிக்கந்தை பொது மருத்துவமனையி லும், சிகிச்சை பெறுவதாக கொரோனா தடுப்பு செயலணியின் பணிப்பாளரும்,

இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். மேலும் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டில் உள்ள 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 506 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 31 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.