இந்தியாவில் கொரோனா பலி 5 ஆக உயர்ந்தது!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா பலி 5 ஆக உயர்ந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.  

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்துவருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது நிரம்பிய நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்மாநில பொதுச்சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 

இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Radio