வடமாகாணம் நோக்கி அழைத்துவரப்படும் வெளிநாட்டவா்கள்..! வாகன தொடரணி இன்று காலை புறப்பட்டது..
வெளிநாடுகளில் இருந்து வருபவா்களை வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக
வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு இன்று காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.
பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொற்றுநோய் ஆய்வு
நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது. குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள்
கிளிநொச்சி , முல்லைத்தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.