3 லட்சத்தை தாண்டய கொரோனா உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor II
3 லட்சத்தை தாண்டய கொரோனா உயிரிழப்பு!!

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தாக்கியதில் உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. 

கொரோனா வைரஸ் உருவான சீனாவை விட, இத்தாலி அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.

இந்நிலையில், கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 

Radio
×