ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவா் வவுனியாவில் கைது..! 4 பிாிவுகளில் குற்றச்சாட்டு..
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் வவனியா நகாில் பொலிஸாரை கண்டதும் தறிகெட்டு ஓடிய இரு இளைஞா் களை பொலிஸாா் சுற்றிவளைத்து வைத்து செய்திருக்கின்றனா்.
இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிசார் வழி மறித்துள்ளனர்.
எனினும் பொலிசாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசென்றனர். இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தலைமையிலான 10க்கு மேற்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்கா வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிசாரின் சைகையை மீறி பயணித்தமை, வேகமாக செலுத்தியமை
போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி சென்றிருந்தனர்.