எம் மக்கள் வாக்குகளை சிதறடிக்க வரும் மாமூல் கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகுட்டுவார்கள்-ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்
எம் மக்கள் வாக்குகளை சிதறடிக்க வரும் மாமூல் கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகுட்டுவார்கள் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்இ முன்னாள் அமைச்சரும்இ முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் செய்த பின்னர் வியாழக்கிழமை (19) ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்
பொதுத் தேர்தலில் இம்முறை நடைபெறக்கூடிய ஆகக்கூடிய ஆசனங்களை இந்த மாவட்டத்தில் நாங்கள் பெறக்கூடிய வாய்ப்புக்களை ஆண்டவன் எங்களுக்கு வழங்கி வைப்பான் என நினைக்கிறேன்.
காரணம்இ குறிப்பாக நமது பிரதேசத்திலே வேறு வேறு தேவைகளுக்காக இன வாதங்களை உருவாக்குவதற்காகஇ இனவாதங்களை உருவாக்கி இந்த பிராந்தியத்தின் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக பல்லாண்டுகாலம் அரசியலை செய்து வருகின்ற மாமூலான கட்சிகளினால் மக்கள் ஏமாற்றம்பட்டதன் விளைவாக இன்று தேசிய காங்கிரஸ் தன்னுடைய சின்னத்திலே களம் இறங்குவதற்கு தீர்மானித்து முதலிலேயே திகாமடுல்ல நமது மாவட்டத்தில் நாங்கள் களம் இறங்கி இருக்கின்றோம்.
பொதுவாக வேறு வேறு திசைகளில் இருந்து மக்களுடைய தேவைகள் அன்றி வேறு தேவைகளுக்காக வருகின்றவர்கள் அவருடைய கட்சிகளில் இங்கு தேர்தல் கேட்டு இந்த மக்களின் வாக்குகளை சிதறடித்து போன பல அனுபவங்களும் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நாங்கள் இன்று இந்த மாவட்டத்தில் பிறந்த நமது மக்கள்இ நமது வேட்பாளர்களை நிறுத்தி பொதுவாக இந்த நாட்டில் எல்லா மக்களையும் வாழ வைப்பதற்கான ஒரு நிலைமையை உருவாக்குவதுஇ எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ்வதற்கான யாப்பினை உருவாக்குவதுஇ நாட்டில் வாழ்கின்ற பொதுவாக பெரும்பான்மை சமூகம்இ சிறுபான்மைச் சமூகம் எல்லோருக்கும் சம நீதி கிடைக்க கூடியவாறான தீர்வினை எட்டுவதற்குரிய அதற்குத் தேவையான ஒரு யாப்பினை மாற்றம் கொண்டு வருவதற்கான அந்த தேவைகளோடுஇ நாட்டு மக்களையும் நாட்டையும் கருதியே தேசிய காங்கிரஸ் இயங்கி வந்திருப்பதனால்இ இம்முறை நாங்கள் அவைகளை நோக்கிய தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.
திகாமடுல்ல நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் நல்ல சிறந்த அறிவுள்ள சமூகத்தைப் பற்றி எண்ணக்கூடிய வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தி இருக்கின்றோம். அதனால் இந்த பிராந்தியத்தின் மக்கள் இதனுடைய உண்மைத் தன்மைகளை உணர்ந்து எங்களுக்கு அதிகமதிகம் வாக்களிப்பதன் மூலம் நாங்கள் இன்ஷாஅல்லாஹ் ஆகக்கூடிய ஆசனங்களை இந்த மாவட்டத்திலேயே பெறுவோம் என்று நினைக்கிறேன்.எனவே இம்முறை அதிக வாக்குகளுடன் எமது கட்சி வெற்றி பெறும் என்றார்.