அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எங்களுக்கு ஒரு சவாலாக அமையப் போவதில்லை
அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இணைந்து போட்டியிடுகின்றோம் இம்முறையும் நாங்கள் நான்கு ஆசனங்களைப் பெற கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஐ.எம். மன்சூர் ,பைசல் காசீம்,ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தனர்.
2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இணைந்து வேட்பு மனுக்கள் செய்த பின்னர் வியாழக்கிழமை (19) ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்
அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எங்களுக்கு ஒரு சவாலாக அமையப் போவதில்லை. அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் தான் சவாலாக அமைவோம் . கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு மக்கள் அளித்துள்ளமை யாவரும் அறிந்தமையே.அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தை வென்றெடுக்க கூடிய சக்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டு வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு இருக்கின்றது.
எங்களது உரிமைகளை வென்றெடுக்க ஜனநாய வழியில் செல்கின்றோம். முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் மக்கள் விரும்பினர் எது எவ்வாறாக இருந்தும் வழமைபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகளை என்பது குறிப்பிடத்தக்கது.அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களுக்குரிய மாவட்டமாக இல்லாமல் போக கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.