முக கவசங்களுடன் வன்னி தோ்தல் தொிவத்தாட்சி அலுவலகம் அதிரடிப்படை, பொலிஸாாின் உச்ச பாதுகாப்புக்குள்..!
நாடாளுமன்ற தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய வுள்ள நிலையில், வன்னி தோ்தல் மாவட்டத்தில் தோ்தல் தொிவத்தாட்சி அலுவலகத்திற்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாா் இணைந்து அதியுச்ச பாதுகாப்பு வழங்கியுள்ளனா்.
பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன் 320 பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ் விஷேட அதிரடிப்படையினர் பொலிசாருடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன் 320பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தினை சூழவுள்ள பகுதிகள் கண்காணிப்பு நடவடிக்கைக் குட்படுத்தப்பட்டுள்ளது. பிரதான வீதிகள் ஐந்து தடை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு இன்று காலை ஐந்து மணிமுதல் மாலை ஐந்து மணிவரையும்
மேற்கொள்ளவுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினருடன் பொலிசார் இணைந்து வீதி ரோந்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.