SuperTopAds

கொரோனாவால் மூடப்பட்ட தாஜ்மகால்!!

ஆசிரியர் - Editor III
கொரோனாவால் மூடப்பட்ட தாஜ்மகால்!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை அடுதது  இன்று செவ்வாக்கிழமை முதல் தாஜ்மகால் மூடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுற்றுலா பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாஜ்மகாலுக்கு வர வேண்டாம் என்றும் அரசாங்கம் அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி நாடு முழுவதும் பள்ளி- கல்லூரிகள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா மையங்கள், பொழுது போக்கு மையங்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோல ஏப்ரல் 15-ந்தேதி வரை பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைகள், தியேட்டர்கள், வழிபாட்டு மையங்கள் வெறிச்சோட தொடங்கி உள்ளன.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருவதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் புதிய வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று வரை தாஜ்மகாலுக்கு ஏராளமானோர் வந்து சென்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக தாஜ்மகாலை மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் தாஜ்மகால் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாஜ்மகாலுக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது தவிர நாடு முழுவதும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.