வவுனியாவில் வெளிநாட்டவர் தங்கியிருந்த வீடு பொலிஸாரால் முற்றுகை..! உடனடியாக 4 வெளிநாட்டவரும் வைத்தியசாலையில் அனுமதி..
வவுனியா- இராசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீடு இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் லக்மால் அவர்களின் தலைமையிலான வவுனியா பொலிஸ் நிலைய விசேட கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவினர்
குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு இன்று காலை சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது ஒரே குடும்பத்தினை சேர்ந்த மனைவி (வயது- 35) , பிள்ளைகள் (5-8வயது) ஆகியோர் கடந்த மாதம் (2) இறுதியில் பெல்ஜியம் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாகவும்
இவர்கள் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படவில்லை எவையும் மேற்கொள்ளவில்லை. கணவர் நேற்றையதினம் (15.03) இரவு பெல்ஜியம் நாட்டிலிருந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் அச்ச நிலை காணப்படுவதினால் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கணவன், மனைவி , இரு பிள்ளைகளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் முகமாக அவர்களை பொலிஸார் வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர்.