கொரோனாவல் திருப்பதியில் குறைந்தது பக்தர்கள் கூட்டம்!!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பீதியால் திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவால் திருப்பதியில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்யும் இடத்தில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது.