SuperTopAds

வீடொன்றில் தங்கியிருந்த 3 சீன பிரஜைகளால் பதற்றம்..! 14 நாட்கள் கண்காணிப்பில் எடுக்குமாறு மக்கள் கோஷம், பொலிஸாா் தலையீடு..

ஆசிரியர் - Editor I
வீடொன்றில் தங்கியிருந்த 3 சீன பிரஜைகளால் பதற்றம்..! 14 நாட்கள் கண்காணிப்பில் எடுக்குமாறு மக்கள் கோஷம், பொலிஸாா் தலையீடு..

வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள வைரவ புளியங்குளம் பகுதியில் சீனா நாட்டு பிரஜைக ள் 3 பேரை பாிசோதனைக்கு உட்படுத்துமாறு பொதுமக்கள் பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடா்ந்து பதற்றமான சூழல் உருவானது. 

இச்சம்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் வவுனியா பிரதான வீதி அபிவிருத் திப்பணிகளை மேற்கொள்வதற்காக வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மூன்று பொறியியல்துறை சார்ந்த சீனா நாட்டுப்பிரஜைகள் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டினூடாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இலங்கை வந்துள்ளார். ஏனைய இருவரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே சீனாவிலிருந்து இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தந்துள்ளனர். 

அவர்கள் கடந்த சில வாரங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்து வந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை 

மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி வைத்திருக்குமாறும் அப்பகுதியிலிருந்து அவர்களை அகற்றுமாறு பொலிசாருக்கு நேற்று இரவு சமூக ஆர்வலர்கள் சிலரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் சீனா நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள வீட்டின் பாதுகாப்பு ஊழியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதுடன் அவர்களை அங்கு தங்கவைக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுடனும் 

மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொடர்பு கொண்டு அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த ஆவணங்கள், அறிக்கைகள் என்பனவற்றை பரிசோதனை மேற்கொண்டதுடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் 

அவர்களுக்கான ஆரம்ப பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.