SuperTopAds

கொரோனாவின் பிடியில் 119 நாடுகள்!!

ஆசிரியர் - Editor III
கொரோனாவின் பிடியில் 119 நாடுகள்!!

உயிர் கொல்லி கொரோனா வைரஸ்சால் உலகம் முழுவதும் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சீனாவில் கடந்த மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

தொடக்கத்தில் சீனாவில் அதிக பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தற்போது 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பரவி மக்கள் பலியாகி வருகிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன.

குறிப்பாக சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 4 ஆயிரத்து 298 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 19 ஆயிரத்து 186 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருக்கிறது.

நேற்று 22 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சீனாவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 778 ஆக உள்ளது.

4 ஆயிரத்து 492 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 61 ஆயிரத்து 482 பேர் குணமடைந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 168 பேர் பலியாகி இருப்பதால் அங்கு கடும் பீதி நிலவி வருகிறது.

ஈரானில் கொரோனாவுக்கு நேற்று 54 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 881 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 8 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. அங்கு 7 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்பெயினில் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. பிரான்சில் நேற்று இறந்த 3 பேரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 33 ஆனது.

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 277 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் 19 பேரும், இங்கிலாந்தில் 6 பேரும், நெதர்லாந்தில் 4 பேரும், சுவிட்சர்லாந்தில் 3 பேரும், ஜெர்மனியில் 2 பேரும், ஈராக்கில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.