SuperTopAds

இங்கிலாந்து பெண் மந்திரியை தாக்கிய கொரோனா!!

ஆசிரியர் - Editor III
இங்கிலாந்து பெண் மந்திரியை தாக்கிய கொரோனா!!

இங்கிலாந்தின் சுகாதாரத்துறை பெண் மந்திரியும், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யுமான நடீன் டோரிஸ் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 இங்கிலாந்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் அந்நாட்டின் சுகாதாரத்துறை பெண் மந்திரியும், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யுமான நடீன் டோரிஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வட அயர்லாந்தில் 16 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மந்திரி நடீன் டோரிசை சந்தித்த நபர்களையும் அழைத்து அவர்களையும் பரிசோதிக்க உள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.