SuperTopAds

இந்தியாவில் கொரோனா!! -பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனா!! -பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-

இந்தியாவில் உயிர் கொல்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 100 நாடுகளில், 4000க்கும் அதிகமானோரின் உயிரை காவுகொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேயில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றுள்ளது உறுதியானது.

கர்நாடகாவில், ‘கொரோனா’ தொற்றுக்கு ஏற்கனவே ஒருவர் உள்ளாகி இருந்த நிலையில், நேற்று மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியை சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்தார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.