SuperTopAds

நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபடும் 8 மாத கர்ப்பிணி!

ஆசிரியர் - Admin
நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபடும் 8 மாத கர்ப்பிணி!

சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எனினும், அவர்கள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் அச்சத்துடனேயே வாழ்நாளை கழித்து வருகின்றனர். நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையும் செயல்பட்டு வருகிறது. இதில் பெண் கமாண்டோவாக சுனைனா பட்டேல் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதுபற்றி சுனைனா கூறும்பொழுது, பணியில் நான் சேர்ந்தபொழுது 2 மாத கர்ப்பிணியாக இருந்தேன். எனது பணியை செய்ய ஒருபொழுதும் நான் மறுத்ததே இல்லை. இன்றும் பணி என்று வந்துவிட்டால் முழு உண்மையுடன் செயல்படுவேன் என கூறியுள்ளார்.

தன்டேவாடா எஸ்.பி. அபிஷேக் பல்லவ் கூறும்பொழுது, ஒரு முறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுனைனாவுக்கு கர்ப்பம் கலைந்து போனது. எனினும், பணியில் இருந்து விடுபட்டு செல்வதற்கு அவர் இன்றும் மறுப்பு தெரிவித்து வருகிறார். பல பெண்களுக்கு ஊக்கமளித்து உள்ளார். அவர் கமாண்டர் பதவியை ஏற்ற பின்பு எங்களது படையில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது என கூறியுள்ளார்.