அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக இருந்து வேலையையும் இழந்து, வந்த வேலையயும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் பட்டதாாிகள்..!

ஆசிரியர் - Editor I
அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக இருந்து வேலையையும் இழந்து, வந்த வேலையயும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் பட்டதாாிகள்..!

பட்டதாாி பயிலுனா் நியமனத்தை நம்பி இருந்த வேலையையும் கைவிட்ட பட்டதாாிகள் தாம் இப்போது நடு தெருவில் நிற்பதாக கவலை வெளியிட்டிருக்கின்றனா். 

இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டதாாிகள் சிலா் கூறுகையில், அரச நியமனம் கிடைக்காத நிலையில் அன்றாட வாழ்வாதாரத்திற்காக தனியார்துறைகளில் பணிபுரிந்தோம். 

இந்த நிலையில் எமக்கான நியமனம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்ததோடு நியமனக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றதாக கடந்த ஒரு மாதமாக விளம்பரப்படுத்தியது.

இதன் காரணமாக பணிதந்த இடத்தில் இருந்து முன் அறிவித்தல் இன்றி விலகிச் சென்று அங்கு நெருக்கடியினை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில் முற்கூட்டியே 

எமது விலகலை அறிவித்தோம். இதனால் சில இடத்தில் எமக்கான பதில் ஆளணி எடுக்கப்பட்டது. இந்த நிலையிலேயே எமக்கு நியமன கடிதமும் கிடைத்தபோது 

தனியாா் துறையிலிருந்து வெளியேறி அரச சேவையில் ஒரு நாள் பணிபுரிந்த நிலையில் மறுநாள் பணிக்குச் சென்ற சிறுது நேரத்தில் எமக்கு பணி இல்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பழைய தனியாா் நிறுவனங்களை அணுகி வேலைவாய்ப்பு கேட்ட நிலையில் எந்த நேரத்திலும் அதனை நாம் கைவிடுவோம். என்ற அச்சத்தில் மறுப்பு தொிவிக்கப்படுகின்றது. 

இந்த அரசாங்கத்தை நம்பி நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம் என பட்டதாாிகள் கூறியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு