SuperTopAds

தமிழா்கள் மீது போா் குற்றம் புாியப்படவில்லை என ஐ.நா வரையில் சென்ற சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறாா்..?

ஆசிரியர் - Editor I
தமிழா்கள் மீது போா் குற்றம் புாியப்படவில்லை என ஐ.நா வரையில் சென்ற சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறாா்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவுடன் இணைந்து தமிழா்கள் மீது போா் குற்றங்கள் புாியப்படவில்லை, மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லை. எ ன ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் வரை சென்று கூறியவா் சுரேன் ராகவன். 

அவருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற தோ்தலுக்கான ஆசனம் வழங்குவதா? அத னை மக்கள் ஏற்றுக் கொள்வாா்களா? என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞான ம் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் 

தமிழ்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது 

பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் சென்று அங்கே தமிழர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்வதற்கு சென்றிருந்த நபர் 

அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.நாம் எவ்வாறு தான் அவருக்கு அதை வழங்க முடியும். எனவே இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது. 

அவருக்கு ஆசனம் வழங்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதனைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை என்று கூற முடியாது ஆனால் 

தவறான போலிப் பிரச்சாரங்கள் செய்ய முடியாதே தவிர அனைவருக்கும் அவர்கள் தொடர்பில் கதைக்க முடியும் எனவே அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோர் அவதானமாக தமது கருத்துக்களை வெளியிடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.