SuperTopAds

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்!! -ஐ.நா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்-

ஆசிரியர் - Editor III
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்!! -ஐ.நா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தில் அதிகளவானர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் பரவலாக இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக கருதப்படும் ஐ.நா. அமைப்பானது, இந்தியாவில் உள்ள ஒரு சட்டத்துக்கு எதிராக இங்குள்ள உச்ச நீதிமன்றத்தையே நாடியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன்பாக, இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிச்செல் பேச்லெட் பலமுறை கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.