மன்னாாில் இராணுவம் அதிரடி..! இரு இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீட்பு. விசாரணை தீவிரம்..
மன்னாா் மாவட்டத்தில் இரு இடங்களில் அடுத்தடுத்து இரு இடங்களில் படையினா் நடாத்திய தி டீா் சோதனை நடவடிக்கையின்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சௌத்பாா் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 2 கிலோ வெடிமருந்து மற்றும் 27 வெடிமருந்து குச்சுகள் மீட்கப்பட்டன, இதேவேளை மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை
சக்தி வாய்ந்த வெடி பொருள் ஒன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பற்றை ஒன்றிலிருந்து குறித்த வெடி பொருளை மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.