SuperTopAds

நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஜால்றா அடிக்காமல், கள்ள ஓட்டுப்போடுபவா்களை கண்டுபிடித்த கிராமசேவகருக்கு இடமாற்றம்..!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஜால்றா அடிக்காமல், கள்ள ஓட்டுப்போடுபவா்களை கண்டுபிடித்த கிராமசேவகருக்கு இடமாற்றம்..!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஜால்றா அடிக்கவில்லை. என்பதற்காக மன்னாா் மாவட்டத்தில் திறம்பட செயற்பட்ட கிராமசேவகா் ஒருவா் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டி ருப்பதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன், 

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேசத்தில் பெரியமடு கிராம உத்தியோகத்தரே ஒரேநாளில் அவசரமாக கோவில்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 27-02-2020 திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் புதிய பிரிவிற்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

என்னும் ஓரிரு தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் இந்த திடீர் இடமாற்றம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மிகவும் சிறப்பாகவும் கடமையாற்றிவந்த வினைத்திறன் மிக்க கிராமசேவகர் என 

அந்த கிராம மக்களிடம் நற்பெயரைப்பெற்ற கிராம அலுவலகர் மாற்றப்பட்டதன் பின்னணியில் ஆளும் தரப்புடன் ஒட்டியிருக்கும் மன்னார் அபிவிருத்தி தொடர்பான முக்கிய பொறுப்பிலுள்ள வவுனியா அரசியல் வாதியின் அழுத்தம் காரணமாகவே 

இந்த திடீர் இடமாற்றம் இடம்பெற்றது. என கிராம மக்கள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகின்றனர். குறித்த கிராமத்தில் குறித்த அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலரின் போலி வாக்குப் பதிவுகளை நீக்கி தேர்தல் சட்டங்களை 

சரியாக நடைமுறைப்படுத்தி தனக்கு கிடைக்கவிருந்த பல முறையற்ற வாக்குகளை இல்லாமல் செய்தார். என்ற காரணத்தினால் குறித்த கிராம அலுவலகரை மாவட்ட செயலகமூடாக அறிவுறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யதமையே இந்த இடமாற்றத்திற்கான காரணம் 

எனவும் குறித்த விடயம் உடனடியாகபாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் வேண்டுமென்றே ஒரேநாளில் இடமாற்றத்துக்கான ஆணை வழங்குவது ஒரு பழிவாங்கும் நடவடிக்க என்பதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 

மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு செல்லப்படுகின்றது. இதேநேரம் இந்த அரசு ஆட்சிக்கு வந்த நூறு நாளில் மக்களிற்கு எந்தவிதமான நன்மையும. கிட்டாதபோதும் அடுத்த தேர்தல் இலாபத்திற்காக 

நூற்றிற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் பழிவாங்கப்பட்டமை மட்டுமே மிச்சம் என்றார். இவ்வாறு ஒரேநாளில் இடமாற்றம் என்னும் பெயரில் பழிவாங்கப்பட்டதாக கூறப்படுவது தொட்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த கிராம சேவகர் தொடர்பில் எமக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. ஆனால் அவரை உடன் இடமாற்றம் செய்யுமாறு மாவட்டச் செயலகத்தில் இருந்து எழுத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய நிலமை 

ஏற்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்சிடம. தொடர்பு கொண்டு கேட்டபோது ,நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் 

முறைப்பாட்டிற்கு தீர்வாகவுமே மேற்படி இடமாற்றத்திற்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்.