SuperTopAds

கூத்தாடிகளின் அரசியல் பழிவாங்கல்..! கரைச்சி பிரதேச செயலா் பிாிவுக்கு இரு பிரதேச செயலா்கள்..

ஆசிரியர் - Editor I
கூத்தாடிகளின் அரசியல் பழிவாங்கல்..! கரைச்சி பிரதேச செயலா் பிாிவுக்கு இரு பிரதேச செயலா்கள்..

கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலகத்திற்கு ஒரே சமயத்தில் இரு பிரதேச செயலா்கள் நியமிக்கப்ப ட்டமையினால் அங்கு குழப்பமான நிலை உருவானது. இந்த குழப்ப நிலைக்கு சில அரசியல் கூத்தா டிகளின் பழிவாங்கல் நடவடிக்கையே காரணம் என கூறப்படுகின்றது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, மன்னாா்- மடு பிரதேச செயலராக கடமையாற்றியவா் அ மைச்சின் அனுமதியுடன் கரைச்சி பிரதேச செயலராக நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையொப்பமிட்டிருக்கின்றாா். 

இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சிக்கு நெருக்கமான அரசியல் கூத்தாடி ஒருவனின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு அமைய பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் இடமாற்ற ம் வழங்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலராக நியமனம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ஒரு பிரதேச செயலா் பிாிவுக்கு இரு பிரதேச செயலா்கள் நியமனம் ஊழியா்களுக்கிடை யில் குழப்பம் நிலவிய நிலையில், மாவட்ட செயலா் திருமதி ரூபாவதி கேதீஸ்வரனுடன் தொடா்பு கொண்டு கேட்டபோது மடு பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட

பிரதேச செயலா் கரைச்சி பிரதேச செயலராக பதவியேற்பாா் என கூறினாா். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராக கடமையாற்றியவாின் நிலை தொடா்பாக அவா் பேசவில்லை.