வவுனியா - ஓமந்தை பகுதியில் காணாமல் போன இளைஞனொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Admin
வவுனியா - ஓமந்தை பகுதியில் காணாமல் போன இளைஞனொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

வவுனியா - ஓமந்தை பகுதியில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.ஓமந்தையில் நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்ததாக கூறி தேடப்பட்டு வந்த இளைஞனே இன்று காலை கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா- ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியில் வசித்து வந்த 26வயதுடைய அர்ச்சுணன் அருள்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டு வளவிலுள்ள தோட்டக்கிணற்றில் தண்ணீர் இறைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது கிணற்றில் அவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸாருக்கும் அப்பகுதி கிராம அலுவலகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வவுனியா - ஓமந்தை பகுதியில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.ஓமந்தையில் நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்ததாக கூறி தேடப்பட்டு வந்த இளைஞனே இன்று காலை கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா- ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியில் வசித்து வந்த 26வயதுடைய அர்ச்சுணன் அருள்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.     

குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டு வளவிலுள்ள தோட்டக்கிணற்றில் தண்ணீர் இறைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது கிணற்றில் அவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸாருக்கும் அப்பகுதி கிராம அலுவலகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு