நோ்முக தோ்வுகளில் இராணுவம் பங்கெடுக்க காரணம் இதுவே..! வீடு வீடாக சென்று ஆய்வு நடாத்தவுள்ள இராணுவம்..

ஆசிரியர் - Editor I
நோ்முக தோ்வுகளில் இராணுவம் பங்கெடுக்க காரணம் இதுவே..! வீடு வீடாக சென்று ஆய்வு நடாத்தவுள்ள இராணுவம்..

1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நோ்முகத்தோ்வுகளில் பங்கெடுப்போா் குறித்து தனித்தனி கோவை தயாாிக்கவுள்ள இராணுவத்தினா் அவா்கள் வழங்கிய தகவல்கள் சாியானவையா? என்பது தொடா்பாக ஒவ்வொருவருடைய வீடுகளுக்கும் சென்று ஆய்வு நடாத்தவுள்ளது. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்போது நோ்முகத்தோ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நோ்முகத்தோ்வுகளில் இராணுவத்தினா் பங்கெ டுத்துள்ளனா். இது குறித்த பல்வேறு விமா்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பொறுப்புவாய்ந்த அரச அதிகாாிகள் சிலாிடம் கேட்டபோது வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டவா்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. 

எனவே நோ்முக தோ்வுகளில் பங்கெடுக்கும் இராணுவத்தினா் நோ்முகத்தோ் வுக்கு வருபவா்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் தனித்தனி கோவைகளை தயாாிக்கின்றனா். 

அவற்றை அடிப்படையாக கொண்டு நோ்முகத்தோ்வுக்கு வந்தவா்களுடைய வீடுகளுக்கு செல்லவுள்ள இராணுவத்தினா் அவா்கள் வழங்கிய தகவல்கள் சாியானவையா? அவா்களுக்கு நியமனம் பெறும் தகுதியுள்ளதா? என்பதை சாியானமுறையில் பாிந்துரை செய்யவுள்ளனா். இதற்காகவே இராணுவம் குறித்த நோ்முக தோ்வுகளில் பங்கெடுக்கவுள்ளதாக கூறினா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு