சென்னையில் 30 வீதமானவர்கள் தைராய்டு நோய்யால் பாதிப்பு!! -மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்-
சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக எடுத்த மருத்துவ ஆய்வில் அங்குள்ள 30 சதவீதம் பேருக்கு தைராய்டு நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மெட்ரோ பாலிஸ்லிஸ்டர் என்ற ஆய்வகம் கடந்த 2 ஆண்டுகளாக எடுத்த மருத்துவ ஆய்வில் சென்னையில் தைராய்டு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
1.59 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 26.4 சதவீதம் பேருக்கு ஹைப்போ தைராய்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3.5 சதவீதம் பேருக்கு ஹைப்பர் தைராய்டு இருப்பது அதன் மூலம் தெரிய வந்துள்ளது.
80 வயது கடந்த முதியவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 சதவீத முதியோர் தைராய்டு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் 10 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களில் 21 சதவீதம் பேருக்கு தைராய்டு பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ பாலிஸ் ஆய்வக துணை தலைவர் டாக்டர் அனிதா சூர்ய நாராயணா கூறியதாவது:-
தைராய்டு சுரப்பிகள் சீராக இல்லாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவில் அயோடின் குறைபாடு, கர்ப்பப்பை நீர்கட்டிகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட ஏதோ ஒரு வகையில் தைராய்டு சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன.
இதற்கு உரிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால் இத்தகைய பாதிப்புகளை முதலில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம் என்றார்.