மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு!! -7 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு!! -7 பேர் பலி-

அமெரிக்காவில் உள்ள மதுமான நிலையத்தில் மர்ம நபர்கள் புகுந்து நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மதுமான விடுதியில் கூடியிருந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து கண் மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio
×