ஊடகவியலாளரை அச்சுறுத்திய மணல் கொள்ளையா்கள்..! முல்லைத்தீவில் தொடரும் அடாவடி..

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளரை அச்சுறுத்திய மணல் கொள்ளையா்கள்..! முல்லைத்தீவில் தொடரும் அடாவடி..

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, கெரடமடு, மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களினுடைய, சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன. 

குறிப்பாக இந்த பகுதிகளை ஊடறுத்து பாய்கின்ற பேராற்றில் மிகவும் பாரிய அளவில் குழிகள் அகழப்படடு, இயற்கை சமநிலையை சீரழிக்கும் வகையில் இந்த மண்ணகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் குறித்த சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுதொடர்பில் 26.02.2020 இன்றையநாள் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரான விஜயரத்தினம் சரவணன், மணற் கொள்ளையர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். 

குறித்த அச்சுறுத்தல் செயற்பாடானது, புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வுச் செயற்பாடு தொடர்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரின் ஔிப்படக் கருவியினை, மணற்கொள்ளையர்கள் கைகளால் தள்ளியதுடன், ஔிப்படம் எடுக்கவேண்டாம் எனக்கூறி அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு