நோ்முக தோ்வை நடாத்தும் இராணுவம்..! சிவில் அரச சேவைக்கு ஆட்சோ்ப்பா? இராணுவத்திற்கு ஆட்சோ்ப்பா?
ஐனாதிபதி கோட்டபாய அரசாங்கத்தினால் நடைமு றைபடுத்தப்படும் 1 லட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகளில் இராணுவம் பங்கெடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மேற்படி 1 லட்சம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப ங்கள் செய்யப்பட்டு இன்று காலை தொடக்கம் பல மாவட்டங்களில் நேர்முக தேர்வுகள் ஆரம்பிக்கப்பட் டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் செய்வதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.
இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகம் காண்பதற்கு இணைந்துக்கொண்டமை சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.