விபத்துக்குள்ளான வாகனங்கள் 15 நிமிடங்களின் பின் தீ பிடித்து எாிந்தது எப்படி..? அரச இரசாயன பகுப்பாய்வு குழு விசாரணைக்கு வருகிறது..!
ஓமந்தை- பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து குறித்தும் விபத்துக்குள்ளான வாகனங் களுக்கு தீயில் எாிந்தமை குறித்தும் அரச இரசாயன பகுப்பாய்வாளா்களின் உதவியை பெற வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் விசாரணை துாிதப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் டீசல் எஞ்சின் வாகங்கள் என்பதைக் கருத்தில் கொண்டும், விபத்தின் பின்னர் சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தீ பரவியமையினை கருத்தில் கொண்டும் தீக்கான காரணத்தை கண்டறிய அரச இரசாயன பகுப்பயவாளரின் உதவி பெறப்படவுள்ளது.
இதற்கான அறிவித்தலை இன்று ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரி பெற்றுக்கொண்டுள்ளார். இந்த தீ பரவும் போது, அவ்விடத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில்,
அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளான. அதன்படி இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன்,
அதனையடுத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் பரவிய தீயால் ஜீப் வண்டி சாரதி உடல் கருகி உயிரிழந்துள்ளார். அதன்படி, விபத்து, தீபரவல் இரண்டினாலும் மொத்தமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 7.15 மணியளவில் பதிவான இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர்
ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் என்பதுடன், உடல் கருகி உயிரிழந்த சாரதியும் அவர்களது உறவுக்கார நபர் என்பது தெரியவந்துள்ளது. இந் நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 21 பேர் வவுனிய, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவருகின்றனா்.
கொழும்பில் இருந்து பருத்தித்துறைநோக்கி பயணித்த இ .போ. ச. பஸ் வண்டி வவுனியாவில் பயணிகளை ஏற்றியவாறு ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஜீப்
கட்டுப்பாட்டை இழந்து பஸ் பயணித்த பாதை ஒழுங்குக்குள் சென்று பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.