கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகளை கொடிகாமத்தில் இறக்கிவிட்டு ஓடிய இ.போ.ச பேருந்து..! கஞ்சா அடிப்பவன் அப்படிதான் செய்வான் என விளக்கம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகளை கொடிகாமத்தில் இறக்கிவிட்டு ஓடிய இ.போ.ச பேருந்து..! கஞ்சா அடிப்பவன் அப்படிதான் செய்வான் என விளக்கம்..

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பய ணிகளிடம் காசு வாங்கிவிட்டு கொடிகாமத்தில் பய ணிகளை இறக்கிவிட்ட இ.போ.ச பேருந்து தொடர்பி ல் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் தனது முக புத்தகத்தி ல் செய்துள்ள பதிவை Jaffnazone தனது வாசகர்களு க்காக அப்படியே பிரசுரிக்கிறது.

யாழ்ப்பாணம் போவதற்காக கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நின்றபொழுது  (7.56 Am)பஸ் நடத்துனர். யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என கூப்பிட்ட படியே வந்து பயணிகளை ஏற்றினார்.

பின்பு பரந்தன் கடந்த பிறகுதான் டிக்கெட் போட்டார் எவ்வடம் என்றார் யாழ்ப்பாணம் என காசு கொடுத்தோம் 120 ரூபா வாங்கியவர் டிக்கெட் தரவில்லை.

யாருக்கும் கொடுக்கவில்லை காசை மட்டும் வாங்கினார் சரி பிறகு தருவார் என இருந்தோம்  கொடிகாமம் போகும்வரை வீதியில் நின்ற  அனைத்து பயணிகளையும் ஏற்றினார்.

பின்பு கொடிக்கம சந்திக்கு 100 மீட்டர் இருக்க வீதியில் சிறிது நேரம் நிற்பாட்டி வைத்திருந்துவிட்டு. சாவகச்சேரி-யாழ்ப்பாணம்    போறவர்கள் டக்கெண்டு இறங்கி 

பின்னுக்குள்ள பஸ்ஸில் ஏறவும் என்றார் எல்லாரும் இறங்கினார்கள். ஏற்கனவே பிதிங்கிக்கொண்டு வந்த அந்த பஸ்ஸில் ( கீழே படத்தில் உள்ள பஸ்)தள்ளி அடைந்தார். 

அப்பொழுது ஒருவர் உள்ளே இருந்து  தம்பி கொண்டக்டர் காசு கேக்கிறார் என்றார் .  ஒண்டும் தேவையில்ல நான் போட்டிட்டன் ஏறுங்கோ என  உள்ளே இருந்து சிங்களத்தில் யாரோ கத்த, இவன் டிக்கெட் எப்பா எண்டான்..

அப்பொழுதுதான் பார்த்தால் இது CTB கொழும்பு பஸ். பிரச்சினை வரும் என  திரும்ப இறங்கத்தொடங்க இந்த பஸ்ஸும் நகர்ந்தது. அந்த பஸ் அதுக்கிடையில் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துவிட்டது.

அந்த சிங்கள நடத்துனர் டிக்கெட் டிக்கெட் என்றார் எல்லாரும் அவன் போட்டிட்டான் என்றோம். சிங்கள நடத்துனர் டிக்கெட் எடு இல்லாவிட்டால்   எல்லாரும்  இறங்கு என சிங்களத்தில் கத்த.

சிலர் அவனை பிடி அடிச்சி பாஸ்சை எல்லாம் உடைச்சிவிடுறன் என இறங்க.

ஒரு முதியவர் தம்பி யாழ்ப்பாணம் கிளினிக்போறன் போய் திரும்பி வாரத்துக்கு மட்டும்தான் காசு வைச்சிருக்கன் என கையிலிருந்த காசை கொடுத்தார்.

காசில்லாதவர்கள் இறங்க இருந்தவர்கள் அவசரம் ஒண்டுமே செய்யமுடியாதென மீண்டும் டிக்கெட் எடுத்தோம். பின் யாழ்ப்பாணம் சென்று கட்டுபாட்டு அறைக்கு முறைப்பாடு கொடுக்க சென்றபொழுது

அங்கு நின்றவர்கள் பஸ் நம்பரை கேட்டுவிட்டு இது கஞ்சா செய்கிற வேலை. அந்த கஞ்சா அடிக்கிறவனை போட வேண்டாம் எண்டால் கேட்கிறங்கள் இல்லை.

இப்படி எத்தனை முறை செய்திட்டான் என கூறியபடி பருத்தித்துறைக்கு போன் எடுத்து விசாரித்து விட்டு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எல்லாரும் சேர்ந்து கடிதம் கொடுக்கவும்.

ஆனால் அதற்கு திங்கள் தான் வரனும் என்றார். பாதிக்கட்ட மக்களைதான் எல்லாரும் சுரண்டி வாழ்கிறார்கள்.

நன்றி. San Robin

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு