தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம்!! -அமெரிக்கா அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம்!! -அமெரிக்கா அறிவிப்பு-

தலிபான் அமைப்பினருடனான அமைதி ஒப்பந்தத்தை, இந்த மாதம் 29ஆம் திகதி ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் தாக்குதல்களைக் குறைப்பதற்கான உடன்பாடு நிறைவேற்றப்படும் தருவாயில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில் பரபஸ்ப தாக்குதல்களை கணிசமாகக் குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை தலிபான் அமைப்பினருடன் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா சென்றுள்ள மைக்கேல் பாம்பேயோ, நேற்று தலைநகர் ரியாதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்.

அந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பு கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், எதிர்வரும் 29ஆம் திகதி அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என கூறினார்.

முன்னதாக, இத்தகைய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதாக தலிபான்களின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு