60 பேருக்கு அதிபா் நியமனம், 30 போ் பதவியை பொறுப்பேற்க பின்னடிப்பு..! தட்டிக்கேட்பாா்களா வடமாகாண கல்வி அதிகாாிகள்..?
வடமாகாண கல்வியமைச்சினால் கடந்த 10ம் திகதி அதிபா் நியமனம் பெற்ற 60 அதிபா்களில் 30 அதி பா்கள் மட்டுமே தமக்கு வழங்கப்பட்ட பதவிகளை பொறுப்பேற்றிருக்கும் நிலையில், 30 அதிபா்கள் த ம் கடமைகளை பொறுப்பேற்காமல் இருந்து வருகின்றனா்.
மாகாணத்திலுள்ள பாடசாலைகள் பலவற்றிலுள்ள அதிபா் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப் பட்ட போட்டி பரீட்சையில் சித்தியடைந்த 60 பேருக்கு கடந்த 10ம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனத்தில் அதிகமானவை வன்னி பாடசாலைகளுக்கானது.
இந்நிலையில் 30 அதிபா்கள் பதவியேற்றுள்ளனா். 30 அதிபா்கள் பதவியேற்றாமல் இருந்து வருகின்ற னா். நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் பதவியேற்கவேண்டும். என கூறப்பட்டபோதும் தமக்கு யாழ்ப்பாணத்தில் நியமனம் கிடைக்கவில்லை. எனவும்,
உயா் அதிகாாிகளுக்கு தொிந்தவா்களுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் நியமனம் வழங்கப்பட்டிருப்பதா கவும் அவா்கள் கூறுகின்றனா். இதேசமயம் நியமனம் பெற்ற அதிபா்கள் சிலா் அமைச்சா்கள், நாடாளு மன்ற உறுப்பினா்களின் அலுவலக வாயில்களில் இடமாற்றம் கேட்டு
தவம் கிடப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.