சிகிச்சைக்கு சென்ற பெண் மீது பாலியல் பலாத்கார முயற்சி..! முல்லைத்தீவு மருத்துவருக்கு எதிரான சட்டநடவடிக்கை ஆரம்பம், விரைவில் கைதாகலாம்..

ஆசிரியர் - Editor I
சிகிச்சைக்கு சென்ற பெண் மீது பாலியல் பலாத்கார முயற்சி..! முல்லைத்தீவு மருத்துவருக்கு எதிரான சட்டநடவடிக்கை ஆரம்பம், விரைவில் கைதாகலாம்..

சிகிச்சைக்கு சென்ற பெண்ணுடன் தகாதமுறையில் நடக்க முயற்சித்த மருத்துவா் மீது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா். 

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு சென்ற பெ ண் மீது அங்கு பணியாற்றும் மருத்துவா் ஒருவா் தகாதமுறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளாா்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்புரைக்கமைய கொழும்பு சுகாதார அமைச்சு மற்றும் 

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பன முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. நிர்வாக நடைமுறைக்கு அமைவாக, முதல்கட்ட விசாரணையின் பின்னர் 

கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio