SuperTopAds

சீனா நோக்கி பயணமாகும் இந்திய இராணுவ விமானம்!!

ஆசிரியர் - Editor III
சீனா நோக்கி பயணமாகும் இந்திய இராணுவ விமானம்!!

சீனாவில் வுகான் நகரில் சிக்கியுள்ள சுமாா் 100 இந்தியா்களை அழைத்து வர இராணுவ விமானம் அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில் சீனாவுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லியில்  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  “சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் உள்ளது. அதே நேரத்தில் சீனாவுக்கு செல்ல தடையேதும் விதிக்கப்படவில்லை.

இராணுவத்துக்கு சொந்தமான சி-17 ரக விமானத்தில் சீனாவுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. வூஹான் நகருக்குச் செல்லும் அந்த விமானம் மூலம் அங்கிருந்து சுமாா் 100 இந்தியா்களை அழைத்து வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்நாடு திரும்ப விரும்புபவா்கள் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகலாம். சீனாவில் உள்ள இந்தியா்களின் நலன்களைக் காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

உலகில் எந்த நாடு இடா்பாடுகளை எதிா்கொண்டாலும் அந்நாட்டுக்கு உதவுவதில் இந்தியா முதன்மையாக இருக்கும். அந்த வகையில் அண்டை நாடான சீனா  பாதிப்பில் இருந்து மீள இந்தியா முடிந்த அளவுக்கு உதவிகளை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.