SuperTopAds

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி லாரி டெஸ்லர் மரணம்!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி லாரி டெஸ்லர் மரணம்!

கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர், தனது 74வது வயதில் காலமானார். 

அமெரிக்காவைச் சேர்ந்த லாரி டெஸ்லர், ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்.

அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது ப்ரவுசரை (Browser) உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். கடைசியாக, கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்சி குறித்து டெஸ்லர் உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.