SuperTopAds

டிரம்ப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்களை நிறைவேற்ற திட்டம்

ஆசிரியர் - Admin
டிரம்ப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்களை நிறைவேற்ற திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் ஆமதாபாத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் பின்னர் ஆக்ராவில் தாஜ்மகாலை பார்த்து விட்டு டெல்லி செல்கிறார்.

அங்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ள அம்சங்கள் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகைக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனெனில் இதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும்.

இந்திய தலைவர்களுடன் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு, பாதுகாப்பு, வர்த்தக உறவு வலுப்படுத்துதல் மற்றும் எச்1பி விசாக்கள் தொடர்பான இந்தியாவின் கவலைகள் போன்றவை இடம்பெறும்.

லும் டிரம்பின் இந்திய பயணத்தில் சுமார் 5 ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. அந்தவகையில் அறிவுசார் சொத்துரிமை, வர்த்தக வசதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளன.

மேலும் அமெரிக்காவில் இருந்து 24 எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்கள், 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரவீஷ் குமார் கூறினார்.