SuperTopAds

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம், அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.

இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல் நிறுவனமாக மாறியது. 

இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.

இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. 

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.