SuperTopAds

பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்!! -பொலிஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor III
பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்!! -பொலிஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு-

சென்னையில் பாராளுமன்றத்தினை முற்றுகை செய்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்துவதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. 

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முஸ்லீம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த தடைச்சட்டம் நிறைவேற்றப்படாது விட்டால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். 

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைஉத்தரவு  பிறப்பித்திருந்த போதும், அதனையும் மீறி போராட்டம் நடக்கும் என்றும் அந்த அமைப்பினர் உறுதியாக தெரிவித்திருந்தனர். 

இதன்படி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள போதும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.