SuperTopAds

அம்மாவின் பிறந்ததினம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாளாக பிரகடணம்!! -முதலமைச்சர் அறித்தார்-

ஆசிரியர் - Editor III
அம்மாவின் பிறந்ததினம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாளாக பிரகடணம்!! -முதலமைச்சர் அறித்தார்-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை 110ஆவது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பெப்ரவரி 24ஆம் திகதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது ஆகும்போது 2 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு, சமூக பொருளாதார நிலையை கருதி இந்த சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சென்னையில் 15 கோடி ரூபாயில் தங்கும் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களின் ஓய்வூதியத்தை ரூபாய் 1500இல் இருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.