333 விவசாய குளங்களை ஆக்கிரமிப்பு செய்து வடக்கு மக்களின் வாழ்வை அழிக்கிறது வனவள திணைக்களம்..!
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 1421 குளங்கள் கமநலசேவை திணைக்களத்தில் கீ ழ் உள்ள நிலையில் 333 குளங்கள் வனவள திணை க்களத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்படி 3 மாவட்டங்களினதும் வனவள, வனஜீவரா சிகள் திணைக்கள, மற்றும் மாவட்ட செயலர்கள் கல ந்து கொள்ளும் கூட்டம் இன்று காலை வவுனியாவி ல் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு நாடாளுமன் ற உறுப்பினர்கள் மற்றும் கமநலசேவை திணைக்களம் அழைக்கப்படவில்லை.
எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றஞ் சாட்டியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகை யில், கமநல சேவைத் திணைக்களத்தின் ஆளுகையில் வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 1421குளங்கள் பதிவில் உள்ளபோதிலும் அதில் 333 குளங்களை
வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமித்துள்ளதனால் கமநலசேவைத் திணைக்களம் எட்டியும் பார்க்க முடியவில்லை. குறிப்பாக வவுனியாவில் 780 குளங்கள் உள்ளபோதும் அதில் 157 குளம் வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ளது.
அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 368 குளங்கள் உற்ளது அதில் 98 குளங்கள் வனவளத் மிணைக்களத்தின் பிடியில் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 273 குளங்கள் உள்ளது. அவற்றில் 78 குளங்கள் வனவளத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.
இவ்வாறு மூன்று மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் விவசாய நடவடிக்கைகளிற்குரிய குளங்களே ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலையில் அந்த மாவட்டங்கள் எவ்வாறு வளம்பெறுவது. இவற்றினை விடுவிப்பது தொடர்பில் பல தடவைகள் பேசியது மட்டுமே நடந்துள்ளது.