SuperTopAds

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்..! மன்றில் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு, மீண்டும் சிக்குவாரா ஞானசார தேரா்..?

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்..! மன்றில் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு, மீண்டும் சிக்குவாரா ஞானசார தேரா்..?

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள் ள விகாரைக்குாிய விகாராதிபதியின்  உடலை நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்த குற்றச்சாட்டி ல் கலகொட அத்தே ஞானசார தேரா் உள்ளிட்ட 3 போரை மன்னில் ஆஜா்படுத்துமாறு மேலன்முறை யீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீராவியடி பிள்ளையார் ஆலைய வளாகத்தில் பெளத்த விகாரையில் தனியிருந்த பௌத்த பிக்குவின் பூதவுடன் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த மனு  இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது பொதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு 

இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் ஏ.ச்.எம், நவாஸ் மற்றும்  அர்ஜுன ஒபயசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இனத்போது நீதிபதிகள் ஞானசார தேரரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.