SuperTopAds

8 வயதில் முதுமை!! -அபூர்வ நோயால் உயிரிழந்த சிறுமி-

ஆசிரியர் - Editor III
8 வயதில் முதுமை!! -அபூர்வ நோயால் உயிரிழந்த சிறுமி-

புரோஜீரியா என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் உயிரிழந்த சம்பவம் ஒன்று உக்ரைனில் பதிவாகியுள்ளது. 

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது.

 உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது.

அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அந்த சிறுமியின் உடல் உள் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன. டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலன் அளிக்காததால் சிறுமி அன்னா சாகிடோன் பரிதாபமாக இறந்தாள்.

கண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், “என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்,” என்றார். உலகிலேயே மிக குறைந்த வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தவர் அன்னா என்பது குறிப்பிடத்தக்கது.