SuperTopAds

மூச்சு திணறி மயங்கி விழும்வரை அடித்தாா்கள்..! கண்ணீா்மல்க கூறிய தமிழக மீனவா்..

ஆசிரியர் - Editor I
மூச்சு திணறி மயங்கி விழும்வரை அடித்தாா்கள்..! கண்ணீா்மல்க கூறிய தமிழக மீனவா்..

மூச்சு விடமுடியாமல் மயங்கி விழும்படி கடற்படையினா் தாக்குதல் நடாத்தினாா்கள், வைத்தியசா லைக்கு கொண்டு செல்லும்போது எதுவும் சொல்லகூடாது. என கடற்படையினா் எங்களை கடுமையாக அச்சுறுத்தினாா்கள் என தமிழக மீனவா் ஒருவா் கண்ணீா்மல்க கூறியுள்ளாா். 

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இரு இழு வை படகுகளும் 11 தமிழக மீனவா்களும் கைது செய்யப்பட்டிருந்தனா். இவா்கள் சட்டவைத்திய அதிகாாியிடம் முற்படுத்தப்பட்டு பின்னா் கடற்றொழில் திணைக்களத்திடம் 

ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  தமிழகம்- ஜெகதாப்பட்டினம் பகுதியை சோ்ந்த சுப்ரமணியம் மாாியப் பன் (வயது48) என்ற மீனவரே மேற்கண்டவாறு கண்ணீா்மல்க கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

25 வருடமாக கடல் தொழில் புாியும் நிலையில் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனா். ஆட்கள் அற்ற நிலையில் எனது மகனையும. தொழிலிற்கு அழைத்துச் செல்வேன். இதனால் மகனும் சேர்ந்தே தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். 

படகின் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றவேளையிலேயே கைது செய்தனர். எமது படகு பழுதடைந்தமையால் எம்மை கட்டி இழுத்துச் செல்ல வந்த படகும் கைது செய்யப்பட்டது. கடற்படையினர் எம்மைக் கைது செய்தமைகூட பரவாயில்லை. 

ஆனால் இரக்கமற்ற தன்மையாக மூவர் இணைந்து மாறி மாறி கட்டை , பொல்லினால் பலமாக தாக்கினர். இவ்வாறு தாக்கியதில் ஒரு கட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியாமல் மயங்கிவிட்டேன். மூவர் இனைந்து தூக்கிவந்தனா். அரச வைத்தியசாலையிலும் பரிசோதனையின்போது 

எதுவுமே சொல்லக்கூடாது என கடற்படையினர் அச்சுறுத்தினர். மூச்சுவிடவோ அல்லது உணவு அருந்தவோ முடியாத நிலையில் இப்போதும் இருக்கிறேன் என அவா் கூறியுள்ளாா்.