ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை!! -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-

ஆசிரியர் - Editor III
ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை!! -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-

இளையதளபதி விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- 

 தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.

விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.390 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு